பாக்யாவை பழிவாங்க இரண்டாம் மனைவியுடன் சேர்ந்து கோபி போட்ட பிளான்..

Serials Baakiyalakshmi Reshma Pasupuleti
By Edward Oct 23, 2022 01:30 AM GMT
Report

ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் பாக்யாவை விவாகரத்து செய்து விட்டு கிடைத்த நேரத்தில் ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் கோபி. திருமணத்தை முடித்த கையோடி ஊட்டி ஹனிமூனிற்கும் ராதிகாவை கூட்டிச் சென்றுள்ளார்.

கடந்த வாரம் முழுவதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்யலட்சுமி மகா சங்கமம் ஆரம்பிக்கப்பட்டு கோபியின் சுயரூபத்தை மூர்த்தி உள்ளிட்டவர்கள் அறிந்து கடுமையாக அசிங்கப்படுத்தியிருந்தார்கள்.

பாக்யாவை பழிவாங்க இரண்டாம் மனைவியுடன் சேர்ந்து கோபி போட்ட பிளான்.. | Gopi Plan To Imitate Wtih Radhika For Bakiya

தற்போது ராதிகாவின் கோபத்திற்கு ஆளாகி நிம்மதி இல்லாமல் இருந்து வரும் காட்சி அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஊட்டியில் இருந்து வீட்டிற்கு சென்ற கோபி பாக்யாவை பழிவாங்க அவர்களின் வீட்டிற்கு முன்பே வீடு குடியேறி இருக்கிறார் கோபி.

புது மனைவி ராதிகாவுடன் பாக்யாவின் வீட்டிற்கு முன் காரில் இருந்து வெளியே வந்து ஜோடியாக சென்ற பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இதன்பின் தான் ராதிகா - பாக்யாவின் ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது. இவர்களுக்கு இடையில் கோபி என்ன பாடுபடப்போகிறார் என்பது வரும் எபிசோட்டுகளில் தெரியவரும்.