பாலாவின் முன்னாள் மனைவியுடன் நெருக்கம் காட்டும் இசையமைப்பாளர்! வைரலாகும் புகைப்படம்..

Gossip Today
1 மாதம் முன்
Edward

Edward

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் வீரம். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்தில் அஜித்தின் 5 நம்பிகளில் ஒருவராக நடித்திருப்பார் நடிகர் பாலகுமார்.

தமிழ் அன்பு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமாகியவர் தான் பாலா. இப்படத்தினை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். அதன்பின் அஜித்தின் வீரம் படத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடித்த பாலா அம்ருதா சுரேஷ் என்பவரை 2010ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 9 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன்பின் பாலா எலிசபெத் உதயன் என்பவரை கடந்த ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா சுரேஷ் பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தருடன் நெருக்கமாக பழகி வருகிறார்கள் என்று செய்திகள் லீக்கானது.

இதனை உறுதிபடுத்த கோபி சுந்தர் அம்ருதாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கோபி சுந்தர் ஏற்கனவே பிரியா என்பவரை 2001ல் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் சில பாடகிகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வைத்து கிசுகிசுவும் எழுந்து வந்த நிலையில் தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி கருத்துக்களை தெரிவித்துள்ளார். கோபி சுந்தர், தமிழில் தோழா, பெங்களூர் நாட்கள், தேவி, வேலன், தள்ளிப்போகாதே போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.