சொந்த காசிலே சூனியம் வைத்து கொண்ட கோபி.. இரண்டாம் கல்யாணத்தால் ராதிகா படுத்தும்பாடு.

Star Vijay Serials Baakiyalakshmi
By Edward Oct 31, 2022 04:19 AM GMT
Report

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. கோபி பாக்யா மற்றும் குடும்பத்தை விட்டுவிட்டு ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்ததில் இருந்து பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

பேசாமல் பாக்யா கூடவே இருந்திருக்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு ராதிகாவிடம் படாதபாடு படுகிறார். விவாகரத்துக்கு பின் தான் சம்பாதித்த 40 ஆயிரம் பணத்தை பாக்யா கோபி அக்கவுண்டில் அனுப்பி வைத்து பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதை பார்த்து கோபி பாக்யாவை திமிர் பிடித்தவள் என்று கூறி நண்பரிடம் குறை கூற ராதிகாவிடம் தினமும் சாப்பாட்டுக்கு அள்ளோலப்படுகிறார் கோபி. வாய்க்கு ருசியாக சாப்பாடு கட்டிக்கொடுக்காமல், சாண்ட்வெச், ஓட்ஸ், உப்புமா என்று டிபன் கட்டிக்கொடுக்க பாக்யா சமைத்து கொடுக்கும் உணவெல்லாம் நினைவுக்கு வருகிறது.

இப்படி சுயநலமாக செயல்பட்டு இரண்டாம் திருமணத்தை ராதிகாவின் தாலி கட்டிய சில நாட்களே இப்படியொரு பிரச்சனையை சந்தித்து வருகிறார். இடையில் கோபியை அவரது அப்பா சாபம் விடுவது கலாய்த்து பாட்டுப்பாடி போவதுமாக இருந்து வருகிறார்.