அவருக்காக உடல் எடையை குறைக்க தயார்? சபதம் போட்டு காரியத்தை முடித்த பிரபல நடிகை..

Gossip Today
By Edward May 25, 2022 05:50 PM GMT
Report

வாரிசு நடிகரின் பையானாக சினிமாவில் 7 வருடங்களுக்கு முன் அறிமுகமாகிய நடிகருடன் ஜோடி போட்டு நடித்தவர் தான் மலையாள அம்மணி. எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற நோக்கத்துடன் விஜே நடிகருடன் மூன்று படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.

அப்படத்திற்கு பிறகு முன்னணி தமிழ், மலையாளம், தெலுங்கு நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அம்மணி சில வருடங்களாக நடித்த படம் எல்லாம் பிளாப்பாகியே வருகிறதாம். அப்படி தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் படம் நல்ல வரவேற்பு தமிழ்நாட்டில் பெறவில்லை.

இதனால் திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தவுள்ளார் என்ற தகவல் டோலிவுட்டில் கசிந்தது. இதற்காக கடின உடற்பயிற்சி செய்து ஒல்லியாகிவிட்டாராம் நடிகை.

என்னதான் படங்கள் வாய்ப்பு கிடைத்தாலும் சில வருடங்களுக்கு முன் இசையே வாழ்க்கையென இருப்பவருடன் இரவில் புகைப்படத்தை எடுத்து அதை வெளியே பதிவிட்டது பெரிய பிரச்சனையாகிவிட்டது.

இதனால் அந்த இசைக்கலைஞருக்காக தான அம்மணி உடல் எடையை குறைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் எத்தனை பேர் கோபத்தில் இருக்கிறார்களோ?....