அந்த ஒரேஒரு ஆசை! சினிமாவிலிருந்து தூக்கி எறிய கவுண்டமணிக்கு இதுதான் காரணமாக அமைந்ததாம்!
தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக திகழ்ந்து அனைத்து வித மக்களையும் தன் காமெடி திறனால் சிரிக்கை வைத்தவர் கவுண்டமணி. ரஜினி, கமல், சத்யராஜ், சிவகுமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் கவுண்டமணி இருக்க வேண்டும் என்று அவர்களே கேட்டு வாங்குவார்களாம்.
அப்படி இருந்த நடிகர் கவுண்டமணி தற்போது படங்களில் நடிக்க தவிர்த்து வருகிறார். இடையில் அவருக்கு உடல்நிலை ஒத்துப்போகாததால் படங்களில் நடிக்க முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தற்போதைய காமெடி நடிகர்களை போல ஹீரோவாக எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை ஆரம்பித்து சிலர் வெற்றியும் சிலர் தோல்வியும் அடைவார்கள்.
அந்தவகையில் நடிகர் கவுண்டமணியும் ஹீரோவாக ஆசைப்பட்டாராம். கிட்டத்தட்ட 5 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ராஜா எங்க ராஜா, ஒரு நல்லவன் ஒரு வல்லவன் உட்பட 5 படங்கள் நடித்துள்ளார், இதில் ஒரே ஒரு படம் மட்டுமே அவருக்கு வெற்றி கொடுத்துள்ளது. பிறகு இவருக்கு பெரிய அளவில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை இருந்தாலும் ஹீரோவாக நடிக்க ஆசை இருந்ததால் ஒரு சில வருடங்கள் அதற்கு முயற்சி செய்தார் எனவும் அப்போது காமெடியனாக நடிப்பதற்கு ஒரு சிலபட வாய்ப்புகள் வந்தும் அதனை தவிர்த்து விட்டார்.
அதன் பிறகு இவருக்கு சினிமாவில் காமெடியனாக நடிப்பதற்கு பல இயக்குனர்களும் வாய்ப்புகள் தரவில்லையாம்.
தற்போது அவரை போல் நடிகர் சந்தானம், சதிஷ் உள்ளிட்டவர்கள் ஹீரோவாக களமிரங்கி வருகிறார்கள்.