டப்பிங் அறையில் தனியாக இருந்த கவுண்டமணி!! உண்மையை உடைத்த பிரபல நடிகர்..

Goundamani Gossip Today Bayilvan Ranganathan Tamil Actors Tamil Actress
By Edward Aug 12, 2023 01:15 PM GMT
Report

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க விசயங்கள் உள்ளிட்ட பல ரகசியங்களை யூடியூப் சேனல்களில் பேட்டிக்கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகராகவும் பத்திரிக்கையாளராகவும் இருந்த இப்படியொரு விசயத்தை செய்து வரும் பயில்வானை பலர் கண்டித்தும் இருக்கிறார்கள்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அதை தொடர்ந்து வரும் பயில்வான், தற்போது கவுண்டமணி பற்றிய ரகசியத்தையும் உடைத்து வருகிறார்.

பல படங்களில் கவுண்டமணியின் மனைவியாகவும் கீப்பாகவும் நடித்திருந்தார் நடிகை ஷர்மிளி. அவருடன் பயில்வானும் சில படங்களில் நடித்திருந்தார்.

ஒரு படத்தில் சர்மிளியை அளேக்காக தூக்கி சுற்றும் காட்சி இன்றுவரை ரசிக்க முடியும். அப்படி அந்த காட்சியில் நடித்ததை பார்த்த கவுண்டமணிக்கு கோபம் வந்து என்னை பல படங்களில் நடிக்க விடாமல் தடுத்தார் என்றும் கூறியிருக்கிறார்.

அது ஒரு பக்கம் இருக்க அந்த சீனுக்கான டப்பிங் பேசும் போது, அந்த அறையில் இருந்து ஒரு சவுண்ட் வந்தது. அப்போது கவுண்டமணிக்கு சர்மிளி மது ஊற்றிக்கொடுத்ததாகவும் இருவரும் நெருக்கமாகவும் இருந்தார்கள் என்று பயில்வான் உண்மையை போட்டுடைத்துள்ளார்.

ஆனால் கவுண்டமணியால் தான் என் வாழ்க்கையே சீரழிந்து போச்சி என்று கூறும் அளவிற்கு பல உண்மைகளை கூறி வருகிறார் நடிகை சர்மிளி.