டாக்சிக் ரிலேஷன்ஷிப்!! ஓபனாக பேசிய கௌதமி.. கமலை சொல்கிறாரா?
கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்றும் அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.
கமல் ஹாசனை பொறுத்தவரை பெர்சனல் வாழ்க்கையை தனக்கு தோன்றியபடி அமைத்துக்கொண்டவர். நடிகை கௌதமியுடன் லிவிங் டூ கெதரில் இருந்தார், பின் இருவரும் பிரிந்து விட்டனர்.
கௌதமி ஓபன்
இந்நிலையில், கௌதமி அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், "டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் நாம் இருக்கிறோம் என்பதை அறிந்து அதில் இருந்து வெளிவருவது மிகவும் கடினமான ஒன்று.
ஒருவருடன் நீங்கள் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் ஏதோ ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தால் அது டாக்சிக் ரிலேஷன்ஷிப்தான்.
நமது வாழ்க்கை மிகவும் அழகானது நீங்கள் உங்களின் வாழ்க்கையை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், வாழ்வதற்கு எல்லா விதமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
தற்போது, இந்த பேட்டியில் கமல்ஹாசனைத்தான் கௌதமி மறைமுகமாக சொல்கிறாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.