சன்னி லியோனுக்கே 1000 ரூபாய் உதவித்தொகை!! அரசுக்கே விபூதி அடித்த நபர்..
1000 ரூபாய் உதவித்தொகை
ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பாக பல நலத்திட்டங்களை அந்தந்த மாநில அரசு வழங்கி வருகிறது. அப்படி அரசால் வழங்கப்படும் உதவித்தொகைகளும் அடங்கும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பாஜக அரசு மஹாதாரி வந்தன யோகனா திட்டத்தின் கீழ், திருமணமான பெண்களுக்கான மாதந்தோறும் அவர்களின் கணக்குகளில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
சன்னி லியோன் பெயரில்
சமீபத்தில் அதிகாரிகள் பெண்களின் கணக்குகளை பரிசோதித்தபோது பாலிவுட் நடிகை சன்னி லியோ பெயரில் ஒரு கணக்கு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்தபோது சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் உள்ள தாலூர் கிராமத்தில் இருக்கும் வீரேந்திர ஜோஷி என்பவர் தான் சன்னி லியோன் பெயரில் போலி வங்கிக்கணக்கினை பதிவு செய்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் அரசிடமிருந்து மாதந்தோறும் 1000 ரூபாய் பெற்று வந்துள்ளார். தற்போது அவரை கைது செய்துள்ளனர். இதனை அறிந்த நடிகை சன்னி லியோன் அதிர்ச்சியடைந்து அந்த நபரை கண்டித்து ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.