கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்திட்டாங்க!! நயன்தாராவால் வருத்தப்பட்ட பிக்பாஸ் ஜிபி முத்து.
பிக்பாஸ் சீசன் 6
டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருந்து டாப் இடத்திற்கு வந்தவர் தான் ஜிபி முத்து. சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
பங்கேற்ற 12 நாட்கள் கூட ஆகாத நிலையில் ஜிபி முத்து மன அழுத்தம் காரணமாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன்பின் தன் யூடியூப் சேனலில் ரசிகர்களுக்கு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
ஒருசில படங்களில் நடித்தும் கமிட்டாகியும் இருக்கும் ஜிபி முத்து என் ஜாய் என்ற படத்தின் ப்ரீ - ரிலீஸ் நிகழ்ச்சிக்கு சென்று செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.

அசிங்கப்பட்ட ஜிபி முத்து
அப்போது நயன் தாரா நடித்த கனெக்ட் படத்தின் ப்ரீ-ரிலீஸ்க்கு என்னை கூப்பிட்டதாகவும் நயன் தாரா உங்களுடன் பார்க்கவிரும்புவதாகவும் கூறினர்.
அதனால் ப்ரீ ரிலீஸ்க்கு சென்றேன் என்று அங்கு தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும் நயன் தாரா பக்கமே பவுன்சர்கள் விடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தெரிந்து விக்னேஷ் சிவன் எனக்கு கால் செய்து கூப்பிட்டார்.
ஆனால் இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு வெளியேறியதாகவும் படம் பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார் ஜிபி முத்து. நயன் தாராவுக்கு இதெல்லாம் தெரியாது நிகழ்ச்சியை நடத்தியவர்கள் தான் இந்த தவறை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.