திருமணத்தில் மணப்பெண் காலில் விழுந்த மாப்பிள்ளை! அப்பாவியா இருக்கானே

Marriage Funny
By Parthiban.A Feb 23, 2022 07:10 PM GMT
Report

திருமண விழாவில் மணப்பெண்ணின் காலில் மாப்பிள்ளை விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

மணப்பெண் மாலை போட்டுவிட்டு மாப்பிள்ளை காலில் விழுகிறார், அதை அப்படியே பின்பற்றி மாப்பிள்ளையும் மாலை போட்டுவிட்டு அவரது காலில் விழுந்து எழுகிறார். அதை பார்த்து அங்கிருப்பவர்கள் சிரித்து சத்தம் போட தொடங்கி விடுகிறார்கள்.

இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் இரண்டு விதமான கமெண்டுகள் வந்துகொண்டிருக்கிறது. பெண்களை சமமாக மதித்து அப்படியே திருப்பி காலில் விழுந்த அவரை சிலர் பாராட்டுகின்றனர். ஆனால் அவர் அப்படி நினைத்து காலில் விழுந்தது போல தெரியவில்லை.

பெண் செய்த சடங்கை அப்படியே அப்பாவி போல திருப்பி செய்திருக்கிறார் அவர். அதனால் இது அவரது அப்பாவித்தனத்தை தான் காட்டுகிறது என நெட்டிசன்கள் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.