விவாகரத்து இருக்கட்டும்!! அடுத்தடுத்து ஜிவி பிரகாஷிற்காக சைந்தவி செய்யும் உணர்ச்சிபூர்வ செயல்
ஜீ.வி.பிரகாஷ் - சைந்தவி
நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாக வலம் வந்த இவர்கள் திடீரென சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இந்த விவாகரத்தை அறிவித்தபோது ரசிகர்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், விவாகரத்து பெற்ற பின்பும் சமீபத்தில் ஜீ.வி.பிரகாஷ் மலேசியாவில் நடத்திய கச்சேரியில் சைந்தவி பங்கேற்று 'பிறை தேடும் இரவிலே' பாடலை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதை தொடர்ந்து, நேற்றைய தினம் நடந்த 22வது சர்வதேச திரைப்பட விழாவில் சைந்தவி பங்கேற்று 'உன்னாலே என் ஜீவன்' பாடலை பாடினார். அதே விழாவில் ஜிவி பிரகாஷிற்கு அமரன் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.
உணர்ச்சிபூர்வ செயல்
அவர் மேடையேறி இந்த விருதை வாங்கிய போது, தொடர்ந்து தன்னுடைய கைத்தட்டல்களை பரிசாக கொடுத்தார் சைந்தவி. விவாகரத்து பெற்ற பிறகும் இவர்கள் இருவரும் professional ஆக சேர்ந்து இருப்பது பற்றி ரசிகர்களும் ஆச்சர்யமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.