ஒரே காரில் சென்ற ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி.. இந்த ட்விஸ்ட்ட எதிர்பார்க்கலையே
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி
சங்கீதம் பயின்ற வந்த ஜி.வி.பிரகாஷ் வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
நடித்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுக்க அஜித்தின் கிரீடம், வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன், குசேலன், காளை, தலைவா என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்தார்.
ஹீரோ, இசையமைப்பாளர் என பிஸியாக பயணித்து வரும் ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.
ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி சேர்ந்து நிறைய ரொமான்டிக் பாடல்கள் எல்லாம் கொடுத்துள்ளார்கள். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாக வலம் வந்த இவர்கள் திடீரென சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக அறிவித்தனர்.
ட்விஸ்ட்
இந்நிலையில், இது குறித்த விசாரணை இன்று நடைபெற அதன் காரணமாக நீதிமன்றம் வந்துள்ள ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்திலிருந்து ஒரே காரில் புறப்பட்டு சென்றிருப்பது கவனத்தை பெற்றிருக்கிறது.