என்னுடன் வாழ்ந்தார், கன்வின்ஸ் செய்து அனுப்பி வைத்தேன்.. ஜி.வி.பிரகாஷ் உடைத்த ரகசியம்!

Tamil Cinema G V Prakash Kumar Actors
By Bhavya Sep 22, 2025 12:30 PM GMT
Report

ஜி.வி.பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியவருக்கு முதல் படமே செம ஹிட் கொடுத்தது.

அதற்கு முன் ஜென்டில்மேன் என்ற படத்தில் பாடகராக அறிமுகமானவர் இப்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். தற்போது, பிளாக் மெயில் என்ற படத்தில் நடித்துள்ளார்.

என்னுடன் வாழ்ந்தார், கன்வின்ஸ் செய்து அனுப்பி வைத்தேன்.. ஜி.வி.பிரகாஷ் உடைத்த ரகசியம்! | Gv Prakash Share A Secret

உடைத்த ரகசியம்! 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், " ஒரு பெண் ஏதோ ஒரு ஊரிலிருந்து என்னை காதலிக்கிறேன் என்று சொல்லி என்னுடைய வீட்டுக்கே வந்துவிட்டார். அவர் கற்பனையில் என்னுடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

வா நாம் போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தார். ஒருவழியாக அவரை கஷ்டப்பட்டு கன்வின்ஸ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.   

என்னுடன் வாழ்ந்தார், கன்வின்ஸ் செய்து அனுப்பி வைத்தேன்.. ஜி.வி.பிரகாஷ் உடைத்த ரகசியம்! | Gv Prakash Share A Secret