வசூல் வந்துட்டா மட்டும் அது நல்ல படமில்லை.. தளபதி69 இயக்குனர் ஹெச்.வினோத் சொன்ன புது விளக்கம்
H. Vinoth
By Parthiban.A
நடிகர் விஜய்யின் அடுத்த படமான தளபதி69 படத்தை இயக்க இருக்கிறார் ஹெச்.வினோத். அவர் இதற்கு முன் சதுரங்க வேட்டை படத்தில் தொடங்கி, தீரன் அதிகாரம் ஒன்று , அதன் பின் அஜித் உடன் மூன்று படங்கள் இயக்கியவர்.
இந்நிலையில் தற்போது சசிக்குமார் நடித்துள்ள நந்தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹெச் வினோத் கலந்துகொண்டார்.
எது நல்ல படம்..
மேடையில் பேசிய ஹெச்.வினோத், 'பெரிய பட்ஜெட்டில் எடுத்து, பெரிய ஸ்டார் நடித்து, அதிகம் வசூல் வந்துவிட்டால் மட்டும் அது நல்ல படம் ஆகிவிடாது.'
'சமூகத்தில் ஒரு சின்ன மாற்றத்தையாவது ஏற்படுத்தும் படம் தான் நல்ல படம்' என அவர் கூறி இருக்கிறார்.