திருமணத்திற்கு பின் மாறாத கிளாமர்!! நடிகை ஹன்சிகா வெளியிட்ட புகைப்படம்

Hansika Motwani
By Edward Feb 03, 2023 06:16 AM GMT
Report

வட இந்திய பக்கம் இருந்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி உச்சம் அடைந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஹன்சிகா. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அதன்பின், விஜய், சூர்யா, விஷால், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்தார். இடையில் சிம்புவுடன் காதல் மற்றும் தோல்வி, உடல் எடையை அதிகமானதால் படவாய்ப்பில்லாமல் இருந்தார்.

திருமணத்திற்கு பின் மாறாத கிளாமர்!! நடிகை ஹன்சிகா வெளியிட்ட புகைப்படம் | Hansika After Marriage Didnt Stop Glamour Photos

அதன்பின் சில ஆண்டுகளுக்கு பின் உடல் எடையை முற்றிலும் குறைத்து கிளாமர் ரூட்டுக்கு மீண்டும் மாறி படங்களில் நடித்தும் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் சோஹைல் என்பவருக்கும் ஹன்சிகாவுக்கு பிரம்மாண்ட அரண்மனையில் திருமணம் நடைபெற்றது.

கணவருடன் சில காலம் ஹனிமூனுக்கு சென்று திரும்பிய ஹன்சிகா மீண்டும் இணையத்தில் அக்டிவாகினார். சமீபத்தில் அவரது திருமணத்தில் எடுத்த வீடியோவை இணையத்தில் வெப் தொடராக வெளியிட்டா.

பெரும்பாலும் நடிகைகள் திருமணமாகினால் கொஞ்சம் கிளாமரை குறைப்பது வழக்கம். ஆனால் அப்படியே மாறாமல் திருமணத்திற்கு பின்னும் தன்னுடைய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.