20 வயதில் காதலிக்க டார்ச்சர் செய்த நடிகர்!! கடும்கோபத்தில் முற்றுப்புள்ளி வைத்த ஹன்சிகா

Hansika Motwani Gossip Today Indian Actress Tamil Actress
By Edward May 24, 2023 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வட இந்திய நடிகையாக மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தனுஷுடன் ஜோடியாக நடித்ததும் விஜய்யின் வேலாயுதம் படத்தில் ஜோடியாக நடித்தார்.

சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.. நடிகர் சிம்புவுடன் ஜோடியாக நடித்த போது அவருடன் டேட்டிங்கில் இருந்து அதன்பின் சில காரணங்களால் பிரிந்துவிட்டார்.

20 வயதில் காதலிக்க டார்ச்சர் செய்த நடிகர்!! கடும்கோபத்தில் முற்றுப்புள்ளி வைத்த ஹன்சிகா | Hansika Angry About Fake News Casting Couch Actor

அதன்பின் தன் மார்க்கெட் இழந்த ஹன்சிகா உடல் எடையை குறைத்து கிளாமர் லுக்கில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார். கடந்த ஆண்டு சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா திருமண வீடியோ மூலம் பல விசயங்களை பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் ஹன்சிகா அறிமுகமான புதிதில் பிரபல நடிகர் ஒருவர் டேட்டிங் செய்ய அடிக்கடி டார்ச்சர் செய்தார் என்றும் அதற்கு தக்க பதிலடி கொடுத்ததால் பக்கமே வரவிலலி என்றும் பேட்டியொன்றில் ஹன்சிகா கூறியதாக செய்திகள் வெளியானது.

ஆனால் ஹன்சிகா இந்த விசயம் கேள்விப்பட்டு, வெளியான செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து, நான் எந்த ஒரு பேட்டியிலும் அப்படியொரு விசயத்தை கூறவில்லை என்றும் தயவுசெய்து கண்டதை எழுதுவதை நிறுத்துங்கள் என்று பதிலடி கொடுத்து ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.