திருமணமாகி ஒரு மாசம் கூட ஆகல!! காந்தாரா ரேஞ்சிற்கு கொலைவெறியை காட்டும் நடிகை ஹன்சிகா
Hansika Motwani
By Edward
தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
சிம்புவுடன் காதல் தோல்விக்கு பிறகு சில காலம் மார்க்கெட் இல்லாமல் இருந்த ஹன்சிகா உடல் எடையை குறைத்து மஹா படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
அதன்பின் யாரும் எதிர்ப்பாராத விதமாக தோழியின் முன்னாள் கணவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சமீபத்தில் பாரிஸ் ஹனிமூனுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டார்.
இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஹன்சிகா காந்தாரி என்ற படத்தில் வெறித்தனமாக நடித்துள்ளார். அப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகவில்லை அதுக்குள்ள இப்படியொரு வெறித்தனமான படமா என்று கருத்துக்களையும் பாரட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.