அது மட்டும் இருந்தா போதும் நாசமாக்கிடுவாங்க!! கண்ணீர்விட்டு குமுறிய நடிகை ஹன்சிகா..
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்தார். இடையில் நடிகர் சிம்புவுடன் ஜோடியாக நடித்து காதலில் இருந்து வந்தார்.
அதன்பின் சில காரணங்களால் சிம்புவை பிரிந்து படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கும் முன் உடல் எடையை முற்றிலும் குறைந்து படுஒல்லியாக மாறிய ஹன்சிகா சிம்புவுடன் மீண்டும் மஹா படத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு தோழியின் முன்னாள் கணவரை காதலித்து திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோவை வைத்து ஹன்சிகா, லவ் ஷாடி டிராமா என்ற பெயரில் ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்.
அந்த வீடியோவின் பிரமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோவின் பிரமோவில், கணவர் சோஹைலை வைத்துக்கொண்டு நான் சினிமாவில் நடித்த போது பொதுமக்களின் பார்வையில் ஏற்கனவே ஒருவருடன் உறவில் இருந்தேன் என்றும் அதை நான் மீண்டும் செய்ய விரும்பவில்லை.
ஆனால் அது எனக்கு திடீரென நிகழ்ந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் மீண்டும் ஊர் அறிய ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் அது நான் திருமணம் செய்யப்போகும் நபராக இருக்க வேண்டும் என்று நினைத்து உறுதியாக இருந்தேன். அது தற்போது நடந்துள்ளது என்று உருக்கமாக கூறியுள்ளார் ஹன்சிகா.