கணவரை 2 வருஷத்திலேயே விவாகரத்து செய்கிறாரா ஹன்சிகா? காரணம் இதுதான்..

Hansika Motwani Gossip Today Divorce Tamil Actress Actress
By Edward Jul 20, 2025 02:45 PM GMT
Report

ஹன்சிகா மோத்வானி

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த இவர், திடீரென சினிமாவிலிருந்து பீல்ட் அவுட் ஆகியுள்ளார்.

கணவரை 2 வருஷத்திலேயே விவாகரத்து செய்கிறாரா ஹன்சிகா? காரணம் இதுதான்.. | Hansika Motwani Divorce Rumors Husband Reply

மீண்டும் கம் பேக் கொடுப்பார் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ஹன்சிகா கடந்த 2022ல் தனது நீண்ட நாள் காதலர் சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், நடிகை ஹன்சிகா தற்போது அவரது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் ஹன்சிகா அவரின் அம்மாவுடன் வசித்து வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.

விவாகரத்து காரணம்

இதற்கு காரணம், கடந்த 2022 டிசம்பரில் திருமணத்தை முடித்து இருவரும் சோஹேலின் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். பின் குடும்பத்துடன் ஒன்றாக இருக்கும் போது சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் இதனால் அதே கட்டிடத்தில் வேறொரு வீட்டிற்கு அவர்கள் மாறியதாகவும் கூறப்படுகிறது.

கணவரை 2 வருஷத்திலேயே விவாகரத்து செய்கிறாரா ஹன்சிகா? காரணம் இதுதான்.. | Hansika Motwani Divorce Rumors Husband Reply

ஆனால் அதன்பின்பும் பிரச்சனை முடியவில்லையாம். கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆங்கில ஊடகத்தில் இந்த செய்தி பரவ ஆரம்பித்திருக்கிறது.

ஹன்சிகா தரப்பில் இதுவரை எந்த விளக்கும் அளிக்கவில்லை, அதேபோல் சோஹேலும் இந்த செய்தியை மறுத்து, விவாகரத்து குறித்த செய்திகளில் உண்மையில்லை என்று மட்டும் தெரிவித்திருக்கிறாராம்.

நடிகை ஹன்சிகா தன் கணவருடன் எடுத்த சமீபகால புகைப்படங்களை டெலீட் செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.