தோழியை விவாகரத்து செய்தவரை திருமணம் செய்தது ஏன்!! உண்மை கலங்கியபடி உடைத்த நடிகை..
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மொத்வானி. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன்பின் நடிகையாகிய ஹன்சிகா தமிழில் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்தார்.
முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஹன்சிகா, சிம்புவுடன் காதலில் இருந்து பின் அவரைவிட்டு பிரிந்துவிட்டார். அதன்பின் மார்க்கெட் இறங்கி காணாமல் போன ஹன்சிகா உடல் எடையை குறைத்து மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் தன்னுடைய நெருங்கிய தோழி விவாகரத்து செய்த கணவர் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்ட முறையில் அரண்மனையில் நடைபெற்ற திருமணத்தில் எடுத்த வீடியோவை ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், திருமணமாகி விவாகரத்தானவரை திருமணம் செய்தது குறித்து அந்த வீடியோவில் தன் அம்மாவிடம் கண்கலங்கியுள்ள காட்சியும் இடம் பெற்றுள்ளது.
அதில், நீ தான் எனக்கு பலமுறை சொல்லி இருக்கிறாய், ஒருவருடைய கடந்த காலத்தை பற்றி பார்க்கக்கூடாது என்று உனக்கே ஓகே என்றால் அது எனக்கு போதும் என்று கண்கலங்கிய படி கூறியிருக்கிறார் ஹன்சிகா.
சிலர் இதுகுறித்து விமர்சித்தவர்களுக்கு ஹன்சிகா பதிலடி கொடுக்கத்தான் இந்த காட்சியை எடுத்து வெளியிட்டுள்ளார் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.