நெருங்கிய தோழியின் கணவரை உஷார் செய்தேனா? நடிகை ஹன்சிகா உருக்கம்
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் சமீபத்தில் சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஹன்சிகாவின் கணவர் சோஹைல் கதுரியா ஏற்கனவே திருமணமானவர். அவரின் முதல் மனைவி பெயர் ரிங்கி. இவர் ஹன்சிகாவின் நெருங்கிய தோழி.
ரிங்கி, சோஹைல் கதுரியா இவர்களின் திருமணத்திற்கு கூட ஹன்சிகா பங்கேற்றுயிருந்தார். ஆனால் தனிப்பட்ட காரணத்தால் ரிங்கியை சோஹைல் கதுரியா விவாகரத்து செய்தார். இதன் பின்னர் 6 ஆண்டுகள் கழித்து ஹன்சிகா சோஹைல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார்.

ஹன்சிகா உருக்கம்
சமீபத்தில் தன் மீது எழும் விமர்சனங்களுக்கு பதில் அளித்த ஹன்சிகா, "பலரும் என்னுடைய தோழியின் கணவரை நான் அபகரித்துவிட்டேன். அவர்களின் விவாகரத்து நான் தான் காரணம் போன்று தவறாக என்னை விமர்சனம் செய்கிறார்கள்."
இது போன்ற வார்த்தைகளால் நான் மிகவும் வேதனை அடைந்தேன். சோஹைல் விவாகரத்துக்கு நான் தான் காரணம் என்று சொல்வதெல்லாம் ஆதாரமற்றது. கையில் பேனா இருந்தால் எப்படி வேண்டுமானாலும் எழுதி கொள்ளலாமா?" என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
