MI தோல்விக்கு ஹர்திக் மட்டும் காரணமில்லை..அம்பானியும் ஜெயவர்தனேவும் தான்..
MI vs CSK
ஐபிஎல் தொடரின் நேற்றைய மே 2 ஆம் தேதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்து சென்னைக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் ஆடிய சென்னை அணி 18.1 ஓவரில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. மும்பை அணிக்கு இது மோசமான தோல்வியாக அமைய, 9 போட்டிகள் வெறும் 2 வெற்றியை மட்டுமே பெற்று 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது.

ஹர்திக் மட்டும் காரணமில்லை
மும்பையின் இந்த தோல்விக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மட்டும் காரணம் இல்லை, இன்னும் சில காரணங்களும் அமைந்துள்ளன. மும்பை அணியின் நிர்வாகம் லெகசியை மையப்படுத்தி அணியை கட்டமைத்துவிட்டது. அதேபோல் கடந்த சில சீசன்களாகவே புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களில் யாருமே சோபிக்கவில்லை. திலக் வர்மா மட்டுமே இந்திய அணிக்காக ஆடியிருக்கிறார். மற்றபடி மும்பை அணியில் ஸ்கவுட்டிங் குழுவும் பல தவறுகளை செய்திருக்கிறதாம்.
ஏனென்றால் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பும்ரா, திலக், சூர்யகுமார், இஷான் கிஷன் போன்ற வீரர்களை கண்டறிந்து மும்பை அணிக்குள் கொண்டு வந்ததாலேயே அந்த அணி சாம்பியன் பட்டங்களை வென்றது. ஆனால் கடந்த 6 வருடங்களில் திலக் வர்மா, நமன் திர் ஆகியோர் மட்டுமே மும்பை அணி கண்டறிந்துள்ளது. மற்றபடி பவுலர்களிலோ, ஸ்பின்னர்களிலோ மும்பை அணியில் புதிய மாற்றம் எதுவும் இல்லை.

இதனால் அனுபவ வீரர்களின் வீக்னஸ், அவர்களின் பலம் எதிரணிகளுக்கு நீண்ட காலமாக தெரிந்துவிட்டது. புதிய வீரர்களின் சர்ப்ரைஸ் இல்லாதது கூட மும்பை அணியின் பின்னடைவாக இருக்கிறது. மற்றொரு பக்கம் மும்பை அணி கண்டறிந்த அன்சுல் கம்போஜ், டிவால்ட் பிரேவிஸ், டிம் டேவிட் ஆகியோரையும் மீண்டும் வாங்கவில்லை. மீண்டும் மீண்டும் அனுபவ வீரர்களை மும்பை அணி நாடியதே அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியிருக்கிறது.
என்னதான் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை மட்டும் குறை சொன்னாலும் அணி நிர்வாகத்தின் தேர்வும் அணியின் தோல்விக்கு காரணம் ஒரு காரணமாக இருக்கிறார்கள். இந்த அணுகுமுறையை மும்பை அணி மாற்றாத வரை சாம்பியன் பட்டத்தை இந்த வருடம் வெல்வது கடினம் தான்.