விவாகரத்தாகியும் மனைவி குடும்பத்துடன் ஹர்திக் பாண்டியா..நடாஷா ஓப்பன் டாக்..
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை கடந்த 2020ல் நிச்சயம் செய்தார்.
டேட்டிங்கில் இருக்கும் போதே முதல் குழந்தையை ஜூலை மாதம் பெற்றெடுத்தனர். கொரானா காலத்தில் திருமணத்தை சாதாரணமாக நடத்தி அதன்பின் பிரம்மாண்ட முறையில் உதய்ப்பூர் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.
குழந்தையுடன் மகிழ்ச்சியா வாழ்ந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன் விவாகத்து செய்தியை அறிவித்தனர். பரஸ்பர பிரிவுக்கு பின் மகன் அகஸ்தியா, நடஷாவுடன் வாழ்ந்து வந்தார்.
நடாஷா பேட்டி
இந்நிலையில் நடாஷா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மகன் அகஸ்தியாவுடன் வாழ்வதில் என்னைநானே நேசிக்க கற்றுக்கொண்டதாகவும் மகிழ்ச்சியாகவும் மனரீதியில் ஆரோக்கியமாகவும் இருக்க ஒரு தாயாக நான் அவருக்கு தேவை என்பதை புரிந்து கொண்டேன். எனது மகனால் ஹர்திக் இன்னும் எனது குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார் ஹர்திக் மனைவி நடாஷா.