ஹர்திக் பாண்டியாவுக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது!! MI அணியில் ஏற்பட்ட குழப்பம்..
ஐபிஎல் மெகா ஏலம்
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகட்சமான 6 வீரர்களை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருப்பதால் பல அணிகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக நட்சத்திர வீரர்கள் இருப்பதால் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 31 ஆம் தேதி ஐபிஎல் அணிகள் யாரை தக்க வைக்கப்போகிறார்கள் என்ற விவரத்தை அளிக்க வேண்டும் என்று பிசிசிஓ கூறியுள்ளது. மும்பை அணியில் ரோஹித் சர்மா விலகுவார் என்று பேச்சு எழ, அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் கேட்பன் பதவி கிடைக்குமா? என்றும் தக்கவைத்தால் அவருக்கு எவ்வளவு சம்பளம் அளிக்கப்படும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா
ஆறு வீரர்களை தக்க வைக்க ஒரு அணி முடிவு செய்தால் அதில் குறைந்தபட்சம் ஒரு உள்ளூர் வீரர் இடம் பெற வேண்டும். அவருக்கு அதிகபட்சமாக 4 கோடி சம்பளம் அளிக்க வேண்டும் என்றும் மற்ற ஐந்து சர்வதேச வீரர்களுக்கு முறையே 18 கோடி, 14 கோடி, 11 கோடி, 18 கோடி மற்றும் 14 கோடி அளிக்க வேண்டும்.
அதாவது ஒரு அணி நான்காவதாக மற்றும் ஐந்தாவதாக இரு வீரர்களை தக்க வைக்க விரும்பினால் கூடுதல் சம்பளத்தை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
அப்படி என்றால் ஹர்திக் பாண்டியாவுக்கு 18 கோடி சம்பளம் அளிக்க முடியாது 14 கோடி சம்பளம் தான் கொடுக்கவுள்ளதாக ஐபிஎல் பயிற்சியாளர் டாம் மூடி கூறியிருக்கிறார். அதற்கு அவர் முயற்சி செய்திருந்தால் 18 கோடி அளித்திருக்கலாம் ஆனால் அதை செய்யவில்லையே என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.