இந்தியாவே கொண்டாடும் மனுஷனுடன் விவாகரத்து!! கோடி ரூபா காரில் உலா வரும் நடிகை..
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தது முதல் தற்போது வரை வரலாற்று சிறப்புமிக்க பல வெற்றிக்ளை ஈட்டித்தந்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் ஹர்திக் பாண்டியா. வெளிநாட்டு நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை காதலித்த ஹர்திக், திருமணம் செய்யாமலே தந்தையானார்.
அதன்பின் இருவரும் பிரமாண்ட முறையில் திருமணம் செய்து, ஒரு மகனை பெற்றெடுத்தனர். கடந்த ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெறவுள்ளதை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
நடாஷா கோடி ரூபா காரில்
விவாகரத்துக்கு பின் தன்னுடைய கேரியரில் நடாஷா கவனம் செலுத்தியும் மகனுடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார். தற்போது மும்பையில் இருக்கும் நடாஷா, உடற்பயிற்சி கூடத்தில் இருந்து விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரில் ஏறி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜிம், சலூன் போன்ற இடங்களுக்கு கூட இந்த காரைத்தான் பயன்படுத்துகிறராம் நடாஷா. இந்த பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. 2.0 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் மற்றும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் அடங்கும். நடாஷா மற்றும் அவரது கணவர் ஹர்திக் பாண்டியா இருவரும் விலையுயர்ந்த கார்களில் பயணம் செய்யவிடுப்பம் கொண்டவர்கள்.
ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரையில் அவரது கார் கலெக்ஷன் பெரியது. லம்போர்கினி ஹூராகேன் எவோ, ஃபோர்ஷே கேயென்னே , ரேஞ்ச் ரோவர் வோக் , லெக்ஸஸ் எல்எம் 350ஹெச், ஆடி ஏ6 (Audi A6), மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார் ஆகிய கார்களை ஹர்திக் பாண்டியா வைத்திருக்கிறார்.
நடாஷா வைத்திருக்கும் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரின் டாப் வேரியண்ட், ரூ78.90 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரின் வேரியண்ட்களின் ஆன்-ரோட் விலையும் தோராயமாக 1 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.