வட போச்சே! மேட்ச்சே ஆடல இதுல இத்தனை கோடிக்கு வாட்ச் கேக்குதா ஆபிஸர்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மேட்ஸ்மேனாகவும் ஆள்ரவுண்டாராகவும் திகழ்ந்து வருபவர் ஹார்திக் பாண்டியா. சமீபத்தில் நடைபெற்ற ஐபில் போட்டிக்கு பின் டி20 உலக கோப்பை போட்டியில் சிறப்பான பங்கினை அளிக்காமல் சொர்ப்ப ரன்களையே எடுத்து சில போட்டிகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார் ஹார்திக்.
இதையடுத்து இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை துவம்சம் செய்து ஆஸ்திரேலியா அணி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் அனைத்து அணியினரும் சொந்த நாட்டிற்கு சென்ற நிலையில் இன்று காலை இந்திய அணியினர் இந்தியாவிற்கு விமானம் மூலம் வந்துள்ளனர். அங்கு ஹார்திக் பாண்டியாவிடம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிசோதனையில் ஈடுபட்டும் சுமார் 5 கோடி மதிப்பிலான இரு வாட்க்களை கைப்பற்றியுள்ளர்.
அப்பொருட்களுக்காக ஆவணங்கள் இல்லாததால் துபாயில் இருந்து மும்பை எடுத்து வர இறக்குமதி வரியை சேர்ந்து அபராதம் கட்டவேண்டும் என்று அதன்பின்பு தான் வாட்ச் கொடுக்கமுடியும் என்றும் கூறியுள்ளனர் அதிகாரிகள். இதுகுறித்து ஹார்திக் பாண்டியா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.