விஜய், சூர்யாவை கெஞ்சிய இயக்குனர்! சொந்த மச்சான் அருண் விஜய்யை ஒதுக்க இதுதான் காரணம்?

Arun Vijay Priya Bhavani Shankar
By Edward Jun 27, 2022 05:49 PM GMT
Report

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ஹிட் கொடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலும் சினிமாத்துறையில் இருந்து வருபவர் நடிகர் அருண் விஜய். அவரை போன்று சூர்யா, விக்ரம் ஆகியவர்களை இயக்கி மிகப்பெரிய படத்தினை கொடுத்து அவர்களின் மார்க்கெட்டை உயர்த்தியவர் இயக்குனர் ஹரி.

ஹரி ஹிட்

சாமி, கோவில், அய்யா, ஆறு, வேல், சேவல், சிங்கம் முதல், இரண்டு. மூன்று போன்ற படங்களையும் எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தார். நடிகர் விஜயகுமார் மகள் ப்ரீத்தா விஜயகுமாரை திருமணம் செய்து வாழ்ந்து வரும் ஹரி இத்தனை ஆண்டுகளில் தன் மச்சான் அருண் விஜய்க்கு என்று கதை ஏன் எழுதவில்லை என்று கேள்விகள் அப்போதில் இருந்தே எழுந்து வந்தது.

தற்போது தான் அருண் விஜய், ஹரி கூட்டணியில் யானை படம் உருவாகி ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. இடையில் விஜய் மற்றும் சூர்யாவின் கால்ஷீட்டிற்காக ஹரி காத்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகியது.

15 வருட காத்திருப்பு

இந்நிலையில் தற்போது அருண் விஜய்யுடன், 15 வருடங்களுக்கு முன்பே வாய்ப்பு கொடுத்திருந்திருக்கலாமே? என்ற கேள்வி சமீபத்திய பிரஸ்மீட்டில் கேட்கப்பட்டது. அதற்கு ஹரி, இந்த கேள்வியை பலர் என்னிடம் கேட்டார்கள், அவர்களுக்கும் இந்த உண்மை இப்போதான் புரியவந்துள்ளது.

அருண் விஜய்யை ஒதுக்க காரணம்

நான் வெறும் செமி கிரியேட்டதான், பாலா, அமீர் போன்ற முழு நேர கிரியேட்டர் கிடையாது. யாரை வேண்டுமானாலும் இயக்கும் சக்தி என்னிடம் இல்லை, ஆனால் அருண் விஜய் நல்ல கதைகலை தேர்வு செய்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் அளவிற்கு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் அப்போது தான் என்னால் அவரை வைத்து இயக்க முடியும் என்று நினைத்திருந்தேன்.

அதற்காக நல்ல தயாரிப்பாளர் கூட்டணி அமையவேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு கல்லூரியில் மாணவன் ரெகமெண்டேஷன் மூலம் சீட் கேட்பதைவிட, அந்த சீட்டை பெறும் திறமை அந்த மாணவனிடம் இருந்து அதை பயன்படுத்தி தான் கல்லூரியில் சேர வைக்க வேண்டும். அப்படி தான் அருண் விஜய்க்கும் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் ஹரி.