கேட்சை தவறவிட்ட வீரர்! கன்னத்தில் பளார் விட்ட பாகிஸ்தான் பவுளர்.. வைரல் வீடியோ
இந்தியாவின் ஐபிஎல் தொடரை போன்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் சூப்பர் லீக் தொடர்களை நடத்தி வருகிறார்கல். 2022ஆம் ஆண்டின் பாகிஸ்தான் சூப்பர் லீக் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய வீரகள் பலர் சம்பளம் கொடுக்கவில்லை என்றும் சில பிரச்சனையால் விலகி நாடு திரும்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விஷயம் முடியும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் லாகூர் அணியின் பாகிஸ்தான் வேகப்பந்து வீரர் ஹேரிஸ் ரெளஃப் சக வீரர் கம்ரான் குலாமை கன்னத்தில் பளார் விட்டுள்ளார்.
அதற்கு காரணம் தாம் வீசிய பந்தின் கேட்சை பிடிக்காமல் விட்டுள்ளார் கம்ரான். அடுத்த ஓவரில் வேறொரு வீரர் கேட்ச்சை பிடித்துள்ளார். அப்போது வாழ்த்து கூற வந்த கம்ரான் குலாமை ஒரு கேட் கூட பிடிக்க முடியலையா என கூறி கன்னத்தில் அடித்துள்ளார்.
இதை சகஜமாக எடுத்து கொண்ட கம்ரான் சிரித்துள்ளார். இதன்பின் போட்டி முடிந்தது இருவரும் கட்டியணைந்து நட்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
? #HBLPSL7 l #LevelHai l #LQvPZ pic.twitter.com/hg5uCFmgac
— PakistanSuperLeague (@thePSLt20) February 21, 2022