20 வருட ப்ளான் எல்லாம் போச்சா? அரசியலால் மக்கள் செல்வாக்க இழந்தாரா ரஜினிகாந்த்!

Rajinikanth
By Edward May 25, 2022 07:05 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக பிரதிபலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்க காரணம் அவரின் ஸ்டைலான நடிப்பும் மனதும் தான்.

அப்படி சென்று கொண்டிருந்த ரஜினிகாந்தின் வாழ்க்கையில் பாபா படத்திற்கு பிறகு அரசியல் வரப்போவதாக ஒரு பிளான் இருப்பதாக செய்திகளும் வெளியானது. அதற்கேற்ப ரஜினிகாந்த் பேச்சும் அரசியல் சம்பந்தப்பட்ட பேச்சாகவே இருந்தது.

இதனால் அரசியலுக்கு நீங்கள் வரவேண்டும் என்று ரசிகர்களின் கோரிக்கையாகவே கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வந்தது. அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் அரசியலில் பிரவேசிப்பேன் என்று கூறி சில மாதங்களில் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டது.

ஏற்கனவே அரசியல் செட்டாகாது என்று ஒரு இமயமலை சாமியார் கூறியதின் பேரில் ரஜினிகாந்த் எப்போது அரசியலில் நுழையப்போவதில்லை என்று ஷாக் கொடுத்து அறிக்கை வெளியிட்டார். இதனால் ரஜினிகாந்தை நம்பி இருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அப்படி ரஜினி பற்றிய அரசியல் சலசலப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்க பாஜகவுக்கு சப்போர்ட்டாக ரஜினிகாந்த் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

ஆனால் சமீபத்திய படங்களும் ரஜினிகாந்திற்கு ஏமாற்றத்தை கொடுத்து தோல்வியையும் தந்துள்ளது. இதனால் அரசியலால் மக்கள் செல்வாக்கை இழக்க அரசியல் வேண்டாம் என்று எடுத்த முடிவால் ரசிகர்கள் கவலையில் இருந்தாலும், பொதுமக்கள் பலரும் அவருடைய இந்த முடிவுக்கு ஆதரவாகவும் இருந்தனர்.