நடுரோட்டில் முதலிரவு காட்சியா!! கூச்சமே இல்லாமல் ரகசியத்தை கூறிய சீரியல் நடிகை ஹேமா..

Serials Tamil TV Serials Actress
By Edward Sep 23, 2023 07:30 PM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா ரோலில் நடித்து வருபவர் நடிகை ஹேமா ராஜ்குமார். சமீபத்தில் சீரியல் நடந்த சில காட்சிகள் பற்றிய விசயங்களை பகிர்ந்துள்ளார்.

பேட்டியில், முதலிரவு காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காட்டி இந்த அனுபவம் குறித்து தொகுப்பாளர் கேள்வி கேட்டுள்ளார். அந்த முதலிரவு காட்சியில் நடந்த ஒரு ரகசியம் மக்களுக்கு தெரியாது.

நடுரோட்டில் முதலிரவு காட்சியா!! கூச்சமே இல்லாமல் ரகசியத்தை கூறிய சீரியல் நடிகை ஹேமா.. | Hema Rajkumar First Night Scene Pandian Stores

நீங்கள் சொல்லுங்கள் அந்த காட்சி எங்கு எடுத்திருப்பார்கள் என்று ஹேமா தொகுப்பாளினியை கேட்க, ஏதாது ரூமில் தான் என்று கூறினார்.

அதற்கு ஹேமா, அன்றைய தினம் நாங்கள் சீரியல் ஷூட் எடுக்கப்போகும் ரூமில் வேறொரு படத்தின் காட்சி படமாக்கப்பட்டது.

எங்கள் சீரியலின் காட்சி முக்கியமானது என்பதாலும் இரு நாட்களில் எடுக்காவிட்டால் கஷ்டம் என்றும் கூறினார்கள்.

அதனால் நடுரோட்டில் ரூம் செட் போட்டு முதலிரவு காட்சியை படமாக்கினோம் என்று ஹேமா ராஜ்குமார் கூறியிருக்கிறார்.

அதுதான் என்னுடைய மறக்க முடியாத அனுபவும் கூட என்று மீனா(ஹேமா) கூறியிருக்கிறார்.