கன்னத்தில் அறைந்த நடிகரால் பறிபோன கண் பார்வை!! இறந்து 2 நாளுக்குப்பின் மீட்கப்பட்ட நடிகை உடல்..

Gossip Today Bollywood Indian Actress Actress
By Edward Dec 04, 2025 03:45 PM GMT
Report

சினிமாவில் ஒரே போன்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சுருக்கிவிடுவதாக பல கலைஞர்கள் கருத்துவார்கள். தங்கள் திறமையை பரிசோதித்து வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காது என்று யோசிக்கும் நிலையில், மற்றவர்கள் அதை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக பார்ப்பார்கள்.

கன்னத்தில் அறைந்த நடிகரால் பறிபோன கண் பார்வை!! இறந்து 2 நாளுக்குப்பின் மீட்கப்பட்ட நடிகை உடல்.. | Hero Slap During Shooting Loses Eyesight Actress

லலிதா பவார்

அப்படி பல படங்களில் வில்லி ரோலில் நடித்து, தற்போது வரை வில்லி பெண்ணின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் தான் நடிகை லலிதா பவார், ராம்நாத் சாகரின் ராமயணத்தில் மந்தராவாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். படங்களில் எதிர்மறை வேடங்களில் நடிப்பதற்காக லலிதா அறியப்பட்டாலும், அவர் ஒரு மென்மையான இதயம் கொண்ட பெண்.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார். முக வாதம் முதல் அவரது முதல் திருமண முறிவு, தனிமையான வீட்டில் தனியாக இறப்பது வரை லலிதாவின் வாழ்க்கை சோகத்தில் முடிந்தது. 1942ல் முன்னணி நடிகர்களில் ஒருவரான பகவான் தாதாவுடன் நடந்த ஷூட்டிங்கில், அவர் லலிதாவை முகத்தில் அறைவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது.

கன்னத்தில் அறைந்த நடிகரால் பறிபோன கண் பார்வை!! இறந்து 2 நாளுக்குப்பின் மீட்கப்பட்ட நடிகை உடல்.. | Hero Slap During Shooting Loses Eyesight Actress

ஆனால் பொய்யாக அடிப்பதற்கு பதிலாக பகவான் தாதா, உண்மையிலேயே லலிதா கன்னத்தில் அறைந்துவிட்டார். பகவான் கடுமையான வேகத்தில் அறைந்ததால் லலிதா அந்த இடத்திலேயே மயக்கம் அடைந்து அவரது முகம் செயலிழந்து, இடது கண்ணிலுள்ள நரம்பு வெடித்துள்ளது. இந்த சம்பவம் அவருக்கு நிரந்தர தழும்பை ஏற்படுத்தியது.

திருமணம்

அவரது பழைய பேட்டியொன்றில், இரு வருடங்களாக எனக்கு எந்தவித பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. பல படங்களில் இருந்தும் நான் நீக்கப்பட்டேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து 1930ல் தயாரிப்பாளர் கண்பத்ராவ் பவாரை, லலிதா திருமணம் செய்தார்.

கன்னத்தில் அறைந்த நடிகரால் பறிபோன கண் பார்வை!! இறந்து 2 நாளுக்குப்பின் மீட்கப்பட்ட நடிகை உடல்.. | Hero Slap During Shooting Loses Eyesight Actress

காதலித்து திருமணம் செய்தாலும் சில ஆண்டுகளிலேயே தன்னுடைய கணவர் தன்னை ஏமாற்றி வருவதாகவும் அதுவும் தன்னுடைய தங்கையுடன் கணவர் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து அடுத்த நொடியே, அவர்களின் திருமண வாழ்க்கையை முடித்தார்.

பின் லலிதா தயாரிப்பாலர் ராஜ்பிரகாஷ் குப்தாவை திருமணம் செய்து ஜெய் என்ற மகனை பெற்றார். 1990ல் லலிதாவுக்கு வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சை காலத்திலேயெ எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.

கன்னத்தில் அறைந்த நடிகரால் பறிபோன கண் பார்வை!! இறந்து 2 நாளுக்குப்பின் மீட்கப்பட்ட நடிகை உடல்.. | Hero Slap During Shooting Loses Eyesight Actress

அவர் இறக்கும் போது, கணவரும் மகனும் ஊரில் இல்லாத காரணத்தால் இரு நாட்களுக்கு அவர் இறந்த செய்தி யாருக்கும் தெரியாமல் போனது. அவருடைய விடிடு தொலைபேசி அழைப்புகளை யாரும் எடுக்காததால், அவருடைய மகன் சந்தேகப்பட்டு நேரில் வந்தப்பின் தான் லலிதா இறந்துபோனது தெரியந்தது. 1998ல் தன்னுடைய 82 வயதில் லலிதா பவார் மரணமடைந்தார்.