நடிகர்களை நம்பி ஏமாந்த நடிகைகள்.. இந்த விசயத்தில் உலக அழகியை ஓவர் டேக் செய்த நயன்தாரா!

Aishwarya Rai Nagma Nayanthara Simran Sneha
By Edward Jul 27, 2022 10:45 AM GMT
Report

சினிமாத்துறையில் இருந்தாலே சக நடிகர் நடிகைகளுடன் நெருக்கமாகவும் ரகசிய தொடர்பில் இருப்பதும் சகஜமான ஒன்றுதான். அப்படி நடிகைகள் நடிகர்களை காதலித்து, பின் ஏமாந்தும் போவார்கள்.

அப்படி காதல் ஜோடிகளாக சுற்றி ஏமாந்தவர்களில் ஒருவர் நடிகை சினேகா. நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தில் நடித்தார். இவர்களுடன் காதல் இருப்பதாகவும் திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். அதன்பின் தொழிலதிபருடன் காதலில் இருந்த சினேகா அதன்பின் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை சிம்ரன் நடிகர் கமல் ஹாசன், ராஜு சுந்தரம் உள்ளிட்ட நடிகர்களுடன் காதலில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.

பல நடிகர்களுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருந்து வந்துள்ளார் நடிகை அஞ்சலி. நடிகர் ஜெய்யுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து அவருடன் ஊர் சுற்றியும் வந்துள்ளார். பின் இருவரும் நண்பர்களாக பழகி வருகிறார்.

90 காலக்கட்டத்தில் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை நக்மா. பல நட்சத்திரங்களுடன் ரகசிய காதலில் இருந்தும் கங்குலி, சரத்குமார் போன்றவர்களுடன் காதலில் இருந்து பின் பிரிந்துவிட்டார். கடைசியில் திருமணமே வேண்டாம் என்று தனிமரமாக வாழ்ந்து வருகிறார்.

உலக அழகி என்றாலே பல நட்சத்திரங்களை ஈர்ப்பவர் என்பதால் நடிகை ஐஸ்வர்யா ராயும் காதலில் சிக்கி தவித்திருக்கிறார். சல்மான் கானுடம் சர்ச்சை சம்பவத்திலும் சிக்கிய அவர், அவரை தொடர்ந்து விவேக் ஒபாராய், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட ஒருசில நடிகர்களுடன் காதலில் இருந்து வந்தார். பின் அபிஷேக் பச்சனையே திருமணம் செய்து கொண்டார்.

ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுக்கும் வகையில் காதல் சர்ச்சையில் சிக்கியவர் நடிகை நயன் தாரா. ஆரம்பத்தில் சிம்பு, பிரபு தேவா என்று காதல் ஜோடியாக பறந்தார். அதன்பின் விக்னேஷ் சிவனை காதலித்து 7 வருடங்கலுக்கு பின் திருமணம் செய்து கொண்டார்.