ரூ. 70 ஆயிரம் சம்பளம் வாங்கிய நடிகர்!! இப்போ ஒரு படத்துக்கு ரூ 50 கோடி..
சினிமாத்துறையில் திறமைக்கேற்ற கூலி என்பது ஆயிரம் அல்ல லட்சம் அல்ல கோடிகளில் கூட சம்பளம் எகிறும். அப்படி உழைத்து முன்னேறிய நடிகர் நடிகைகள் தற்போது பல கோடி சம்பளம் பெற்று டாப் இடத்தினை பிடிக்கிறார்கள். அப்படி எந்தவொரு பின்புலனும் இல்லாமல் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பல கோடி சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் திகழ்ந்து வருகிறார் ஒரு நடிகர். அவர்தான் நடிகர் கார்த்திக் ஆர்யன்.
கார்த்திக் ஆர்யன்
தந்தை குழந்தநல மருத்துவர், தாய் மகப்பேறு மருத்துவர் என்று மருத்துவ குடும்பத்தில் பிறந்தவர் நடிகர் கார்த்திக் ஆர்யன். அவரும் மருத்துவராக எதிர்பார்த்த குடும்பத்தினருக்கு தன் கனவு, பாதை வேறு என்று பொறியியல் படிப்பை தேர்வு செய்தார். பின் சினிமாவில் நுழைய வேண்டும் என்ற கனவோடு கல்லூரி காலத்தில் இருந்தே, வெள்ளித்திரை வாய்ப்புக்காக தீவிர காட்டினார்.
அனைத்தும் தோல்வியாக, பல கம்பெனிகள் அவரை நிராகரித்தும், தொடர்ந்து போராட்டியிருக்கிறார் கார்த்திக். இறுதியில் 2011ல் பியார் கா பஞ்சநாமா என்ற படம் அவருக்கு அறிமுகத்தை கொடுக்க, அப்படத்திற்காக ரூ. 70 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார்.
ரூ. 50 கோடி
இப்படத்தில் நகைச்சுவை கதை என்பதால் முக்கிய ரோலில் நடித்து பாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தார். படம் வெற்றி பெற்றதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு பின் ஆகாஷ்வாணி என்ற படத்தில் முன்னணி ரோலில் நடித்தார். 2018ல் சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி எப்ற படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.
70 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியவர் 7 ஆண்டுகளுக்கு பின் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்தார். லவ் ஆஜ் கல், போல் புல்லையா 2 போன்ற ஹிட் படங்களில் நடித்து டாப் ஹீரோவானார். அதிக வசூலை ஈட்டிய படங்களில் ’போல் புல்லையா 2’ படம் இடம் பிடித்தது.
அதாவது ரூ. 60 கோடி பட்ஜெட்டில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் வேட்டையாடியது. கடந்த ஆண்டு வெளியான ‘போல் புல்லையா 3’ படத்தில் கார்த்திக் ஆர்யனுக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இதன்மூலம் ஒரு படத்திற்கு ரூ. 50 கோடி வரை சம்பளம் பெறும் நடிகராக மாறியிருக்கிறார் கார்த்திக் ஆர்யன். தற்போது நடிகர் கார்த்திக் ஆர்யனின் சொத்து மதிப்பு சுமார் 45 முதல் 50 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.