சந்திரசேகர் பையனா? வெளிப்படையாக கலாய்த்த ஹிப்ஹாப் ஆதி!
aadhi
SivakumarinSabadham
hiphopaadhi
By Edward
பெண்களை கொச்சைப்படும் விதமாக வெளியான கிளப்புள மப்புள பாடல் மூலம் பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி. இப்பாடலுக்கு பின் அவரே இயக்கி நடித்து வருகிறார். இதையடுத்து ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் இசையமைத்தார்.
தற்போது வெற்றி படங்களை கொடுத்து வந்த ஆதி நடிப்பிலும் இறங்கினார். மீசைய முறுக்கு, நட்பே துணைபோன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. சமீபத்தில் சிவகுமாரின் சபதம் என்ற படத்தில் நடித்தும் இயக்கியும் இருந்தார்.
படம் வெளியாகி ஓரளவிற்கு பேசப்பட்ட நிலையில் இப்படத்தில் விஜய்யை கலாய்க்கும் விதமாக ஒரு காட்சி அமைந்துள்ளது. தற்போது அந்த காட்சி வீடியோவாக இணையத்தில் வைரலாகி விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
Chandrashekhar oda Paiyan?..
— Shittier Tamil Movie Details (@TamilDetails) December 17, 2021
Guts na @hiphoptamizha ?? pic.twitter.com/vbwM0xzfUO