மார்பக புற்றுநோயால் பாதிப்படைந்த நடிகை உமா சங்கர்..உருக்கமான பதிவு..

Tamil Actress Actress
By Jai Nov 19, 2026 01:33 PM GMT
Report

மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சொக்கத்தங்கம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமான நடிகை உமா சங்கரி, தற்போது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று தற்போது உடல்நிலை குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மார்பக புற்றுநோயால் பாதிப்படைந்த நடிகை உமா சங்கர்..உருக்கமான பதிவு.. | Hokkathangam Actress Uma Shankari Emotional Post

உமா சங்கர்

நடிகர் சத்யராஜ் நடித்த வீரநடை படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை உமா சங்கரி. இப்படத்தினை தொடர்ந்து மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சொக்கத்தங்கம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலாமானார்.

இதனையடுத்து தென்னிந்திய மொழிப்படங்களில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த உமா, கடந்த 2006ல் துஷ்யந்த் என்பவரை திருமணம் செய்து ஒரு மகனுக்கு தாயானார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் உமா சங்கரிக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.

மார்பக புற்றுநோயால் பாதிப்படைந்த நடிகை உமா சங்கர்..உருக்கமான பதிவு.. | Hokkathangam Actress Uma Shankari Emotional Post

அதற்காக தீவிர சிகிச்சைகளை மேற்கொண்ட உமா, தற்போது கீமோதெரவி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சைகளை மேற்கோண்டு வருகிறார். தற்போது தன்னுடைய உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து இன்ஸ்டாகிராமில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

மார்பக புற்றுநோயால் 

அதில், கீமோதெரபி சிகிச்சை மிகவும் கடினமாக இருந்தாலும், அதைவிட நான் வலிமையானவள், இறுதிக்கட்ட ஊசி மருந்துகள் என்னுடைய வாழ்க்கையின் அடுத்த அத்தியாத்தை நோக்கிய முதல் படி என்று கடினமான காலக்கட்டத்தில் இருந்து கொண்டு மனம் தளராமல் புன்னையுடன் மற்றவர்களுக்கு ஊக்களிக்கும் வகையில் பேசியுள்ளதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.