மீசை வளரும் வயதில் சிகரெட்! கமல் ஹாசனை திட்டிய லைட்மேன்..
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் உலக நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது 230 படங்களுக்கும் மேல் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த வயதில் அனைத்துவித துறையிலும் பணியாற்றி வரும் கமல் ஹாசனை பற்றி பல பிரபலங்கள் அவருடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்தும் வருவார்கள்.
அப்படி சில வருடங்களுக்கு முன் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருடன் ஒரு நேரலையில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் கமல் ஹாசன். முதலில் பேசிய கே எஸ் ரவிக்குமார் நாட்டாமை, முத்து படங்களின் போது அனைவரும் ஜுனியர்கள் என்பதால் அவர்கள் முன்பே நான் சிகரெட் பிடித்திருந்தேன்.
இதையடுத்து கமலின் அவ்வை சண்முகி படத்தின் போது நான் சிகரெட் பிடித்ததை என் நண்பர்கள் பார்த்து திட்டி அடிக்கவே வந்துவிட்டார்கள். இப்படியான ஒரு கலைஞர் முன் சிகரெட் பிடிக்கலாமா என்று கூறியதால் அப்போதில் இருந்து நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தினேன் என்று கூறியுள்ளார்.
அவரை தொடர்ந்து பேசிய கமல் ஹாசன், மீசையும் சிகரெட்டும் வளரும் காலத்தில் நான் சிகரெட் பிடித்தேன். அப்போது லைட்மேன் ஒருவர் சின்னபையன் நீ இப்படி சிகரெட் பிடிக்கலாமா என்று அடிக்கவே வந்துவிட்டார்.
அதன் பின் கழிவறையில் அடிக்க சென்றபோது இங்கேயெல்லாம் சிகரெட் பிடிக்கலாமா என்று தோன்றியதால் அப்போது விட்டேன் சிகரெட்டை என்று கூறியுள்ளார்.
கே எஸ் ரவிக்குமார் என்னை பார்த்து சிகரெட் பிடிப்பதை விட்டது அவரின் மனைவி என்னிடம் வந்து கூறினார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
How #Kamal Quits Smooking Habit pic.twitter.com/gpclVYhYDF
— chettyrajubhai (@chettyrajubhai) December 27, 2021