திருமணமாகி சில நாட்களில் தற்கொலை! விஜே சித்ரா தற்கொலைக்கு அரசியல்வாதி தான் காரணமா?

Serials V. J. Chitra
By Edward Apr 30, 2022 07:20 AM GMT
Report

தொலைக்காட்சி சேனலில் விஜேவாக பணியாற்றி பின் பிரபல டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. முல்லையாக மக்கள் மனதை ஈர்த்த சித்ரா, ஹேமந்த் என்பவரை 2020ல் ரகசியமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி ஒருசில மாதங்களாகிய நிலையில் ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் ஹேமந்த் தான் என்று கூறி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சித்ரா மரணமடைந்ததற்கு இவர்கள் தான் காரணம் என்று ஹேமந்த் கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்று புகாரளித்துள்ளார். என் மனைவி தற்கொலைக்கு நான் தான் காரணம் என்ற சேற்றை அடித்தார்கள்.

இதை போக்க தான் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். சித்ரா மரணத்தில் ஒரு அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவரால் எனக்கு ஆபத்து என்றும் கூறியுள்ளார்.

மேலும் உண்மையை கூறினால் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டி வருகிறார்கள். நான் இறக்கும் நிலை வந்தால் என் மனைவி இறப்பதற்கு முன் என்னிடம் கூறிய உண்மைகளை கூறிவிடுவேன் எனவும் தெரிவித்திருக்கிறார். இச்சம்பவம் தற்போது சித்ரா மரணத்தில் புது திருப்பமாக மாறியுள்ளது.