அந்த பெண்ணிற்கும் எனக்கும் எந்த தொடர்பில்லை! முதல் கணவர் விவகாரத்தில் சிக்கித்தவிக்கும் இயக்குநர்..
மலையாள சினிமாவில் மூத்த நடிகராக இருப்பவர் முகேஷ். 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகை சரிதாவை சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். இதையடுத்து 2013ல் மேதில் தேவிகா என்ற டான்சரை இரண்டாம் திருமணம் செய்து 8 ஆண்டுகள் வாழ்ந்தார். மேதிலுக்கும் இது இரண்டாம் திருமணமாம்.
இந்நிலையில் இருவருக்கும் ஒத்துவரவில்லை என்று மேதில் முகேஷை விவாகரத்து செய்வதாக நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு விளக்கமளித்த மேதில் தேவிகா, முகேஷ நல்ல மனிதர், அன்பு காட்டுவதில் சிறந்தவர். ஆனால் என்னிடம் நல்லபடியாக வாழ்க்கையை கொண்டு செல்லவில்லை என்பதாலும் அவரை பற்றி இழிவாக பேச விரும்பமும் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மேதில் தேவிகாவின் முதல் கணவர் யார் என்று பலரும் தேடிக்கொண்டிருந்த நிலையில் அவர் பெயர் ராஜிவ் நாயர் என்று தெரியப்பட்டது. அவர் யார் எந்த சமுகத்தின் அடையாளம் என நோண்டி பார்த்ததில் மலையாள சினிமா இயக்குநர் ராஜிவ் கோவிந்தன் தான் என்று புகைப்படத்தோடு வெளியிட்டனர்.
ஆனால் இயக்குநர் ராஜிவ் கோவிந்தன் மேதிலின் முதல் கணவர் கிடையாதாம். சமுகவலைத்தளத்தில் இதுபற்றி கேள்வி எழுந்ததை அறிந்த ராஜிவ் கோவிந்தன், மேதில் தேவிகாவின் முதல் கணவர் நானில்லை. அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். இதுபோன்று பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார் ராஜிவ் கோவிந்தன்.
