அந்த படம் பண்ணிருக்க கூடாது..வாய்ப்பே போய்டுச்சு!! காதல் சந்தியா ஓபன் டாக்..
காதல் சந்தியா
இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் தான் காதல். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சந்தியா நடித்து அறிமுகமாகினார். இப்படம் கொடுத்த ஆதரவால் அவரை காதல் சந்தியா என்று கூறி வந்தனர். இப்படத்தை தொடர்ந்து மலையாள மொழிகளிலும் நடித்து பிரபலமான சந்தியா, 2015ல் வெங்கட் சந்திரசேகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து செட்டிலாகினார்.

ஒரு பெண் குழந்தை பெற்ற சந்தியா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்து வந்தார். தற்போது சின்னத்திரை சீரியலான மனசெல்லாம் என்ற தொடரில் நடித்திருந்தார். ச
மீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், கரியரில் இந்த படம் நான் பண்ணாம இருந்திருந்தால் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் என்று நினைத்த படம் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அந்த படம் பண்ணிருக்க கூடாது
அதற்கு சந்தியா, தெலுங்கில் அன்னவரம் படம் தான். எல்லாரும் சொன்னாங்க, பவன் கல்யாணின் அந்த படம் பண்ணா, சாவித்ரி - சிவாஜி கணேசன் காமினேஷன் மாதிரி இருக்கும், நல்லா இருக்கும், அதன்பின் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும்னு சொன்னாங்க. அப்போது எனக்கு ஹீரோயினாக பல படங்கள் வந்துட்டு இருந்தது. எல்லாரும் சொன்னதால் அந்த படத்தில் நடித்தேன்.

அந்த படத்திற்கு பின் ஹீரோயின் வாய்ப்பு ரொம்ப கம்மியாகிவிட்டது. தமிழிலும் மார்க்கெட் போய்டுச்சு. அந்த ரோலுக்காக நான் ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தாலும், என் கரியரில் அந்த படம் நான் பண்ணிருக்கக் கூடாது. அப்படி பண்ணாமல் இருந்திருந்தால், தெலுங்கு 2, 3 படம் கிடைத்திருக்கும், தமிழிலும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
அன்னவரம் பண்ணும்போதே எனக்கு கொஞ்சம் டல்லாக இருந்தது. அதன்பின், டிஸ்யூம் படம் வெளியில் வந்தாலும், அன்னவரம் படத்தால் சரியான படம் அமையவில்லை. அப்படி வரும் படத்தை தேர்வு நடித்தாலும் அது தப்பாக போய்விட்டது. நாம் காத்திருந்து நல்ல படத்தை தேர்வு செய்திருக்க வேண்டும், அதை பண்ணானதால், தப்பாக போய்விடும் என்று சந்தியா ஓபனாக பேசியிருக்கிறார்.