முதல் வாட்டி பாக்கும்போது அறையணும்னு தோணுச்சு!! சரத்குமார் மனைவி ராதிகா ஓபன் டாக்..
சரத்குமார்
நடிகர் சரத்குமார் தன்னுடைய 72வது வயதை ஜூலை 14 இன்று எட்டியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் நடிகையும் சரத்குமாரின் மனைவியும் விருது நிகழ்ச்சி ஒன்றில் கணவர் பற்றி பேசிய வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், அவரை முதல் தடவையாக பார்த்தபோதே ஓங்கி அறையணும்னு தோணுச்சு. ஏன்னா அவர் வந்து ஒரு மொக்க ஜோக் சொல்லிட்டு, அதுக்கே அவரே சிரிச்சிட்டே இருந்தார்.

நான் மட்டும் சிரிக்கவே இல்லை. இதைவிட நல்ல ஜோ எதுவும் உங்களுக்கு தெரியாதான்னு கேட்டேன். இப்ப வரைக்கும் அந்த பழக்கம் மட்டும் மாறவே இல்லை.
மொக்க ஜோக்ஸ்னா அதுக்கு ஒரு யுனிவர்சிட்டியே சரத்குமார் தான். எந்த நேரமும் ஏதாவது ஒரு ஜோக் ரெடியா இருக்கும். நான் சோசியல் மீடியாக்களில் மொக்க ஜோக்ஸ் போடுறதுக்கு முக்கிய காரணமே அவர்தான்.
அவர்கிட்ட இருக்கிற மொக்க ஜோக்ஸ்க்கு பதிலடி கொடுக்கணும் தான் நான் வீடியோ போட ஆரம்பிச்சேன். ஆனால் நான் போடுற ஜோக்ஸ் எல்லாமே சோசியல் மீடியாக்களில் இருந்து எடுத்ததுதான் என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய குரோஷியிடம் ராதிகா கூறியுள்ளார்.