ரஜினியை அந்த விசயத்தில் படாதபாடு படுத்திய காமெடியன்ஸ்!! சூப்பர் ஸ்டாருக்கு வடிவேலுலாம் சும்மா தான்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காமினேஷனில் பல நடிகர்கள் இணைந்து நடித்து நல்ல வரவேற்பு பெற்றவர்கள் இருக்கிறார்கள். அதிலும் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய வசூல் படமாக அமைந்தது சந்திரமுகி.
அப்படத்தில் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது வடிவேலுவின் காமெடி தான். ஆனால் வடிவேலுவை விட ரஜினிகாந்திற்கு பிடித்தமான காமெடி நடிகர்கள் இருவர் இருக்கிறார்களாம். அப்படியொரு நடிகர் ரஜினிகாந்தை தன் காமெடி சென்ஸ்-ஆல் படாதபாடு படுத்திருக்கிறார்.
அதுவேறு யாரும் இல்லை, பாட்ஷா, அருணாச்சலம், வீரா, அண்ணாமலை, பாண்டியன், ராஜாதி ராஜா, படிக்காதவன் போன்ற படங்களில் இணைந்து நடித்த ஜனகராஜ் தான். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்த அனைத்து காமெடிகளும் இன்று பார்த்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.
ஜனகராஜ் தான் ரஜினிகாந்துக்கான ஃபேவரெட் காமெடி நடிகராக இன்றளவும் இருந்து வருகிறார்.
அவருக்கு பின் நடிகர் செந்திலுடன் இணைந்து நடித்து மிகப்பெரிய காமினேஷ் கொடுத்து நடித்து வந்துள்ளனர். ஆனால் அதன்பின் இன்று வரை ரஜினிகாந்த் உடன் நடிக்கும் நடிகர்கள் இவ்விரு நடிகர்களுக்கு இணையாக பேசப்படவில்லை.