விஜய்யுடன் இப்படி நடிக்க வேண்டும்.. சீரியல் நடிகையின் ஆசை

Vijay Star Vijay
By Kathick May 21, 2022 01:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது தளபதி 66 படம் உருவாகி வருகிறது. விஜய்யுடன் இணைந்து பல நடிகைகள் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அப்படி விஜயுடன் இணைந்து தங்கையாக நடிக்க வேண்டும் என்று பிரபல நடிகை ஒருவர் ஆசைப்பட்டுள்ளார்.

விஜய் டிவியில் சூப்பர்ஹிட் சீரியலான நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியலில் கதாநாயகனின் தங்கையாக நடித்து வரும் நடிகை காயத்ரி தனது வெள்ளித்திரை அறிமுகம் குறித்து பேசியுள்ளார்.

அவரிடம் சினிமாவில் எப்போது நுழைவீர்கள் என்று கேட்டபோது, ' சினிமாவில் நடித்தால் விஜய்க்கு தங்கையாக தான் நடிப்பேன் ' என்று அனைவருக்கும் சர்ப்ரைஸ் தரும் வகையில் பதில் ஒன்றை கூறியுள்ளார்.