சிவகார்த்திகேயன் செல்ஃப் மேட் ஸ்டார் கிடையாது..காரை யார் வங்கி கொடுத்தா? விளாசிய பிஸ்மி..

Sivakarthikeyan Gossip Today Tamil Actors
By Jai Oct 15, 2026 02:00 PM GMT
Report

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் தன்னுடைய நற்பணி மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசியிருந்தார். அப்போது நான் சுயமாக உருவான கலைஞன் அல்ல, மக்களால் உருவக்கப்பட்டவன் என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். இந்த பேச்சை பலரும் விமர்சித்து வந்த நிலையில், பத்திரிக்கையாளர் பிஸ்மி, சிவகார்த்திகேயனின் திரையுலக பின்னணி ரகசியங்களை பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் செல்ஃப் மேட் ஸ்டார் கிடையாது..காரை யார் வங்கி கொடுத்தா? விளாசிய பிஸ்மி.. | Not A Self Made Star Bismi Slams Sivakarthikeyan

அதில், உண்மையை சொல்லப்போனால் சிவகார்த்திகேயன் செல்ஃப் மேட் ஸ்டாரும் கிடையாது. பீப்பிள் மேட் ஸ்டாரும் கிடையாது, அவர் ஒரு ஆர்.டி. ராஜா மேட் ஸ்டார் என்பதுதான் உண்மை. சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை அவருடைய வளர்ச்சியை பார்த்தால், அவரை ஒரு நட்சத்திரமாக உருவாக்குவதில் ஆர். டி. ராஜாவுக்கு தான் மிகமுக்கியமான பங்கு இருக்கிறது.

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் ஒரு செகண்ட் ஹேண்ட் காரை தான் ஓட்டிக் கொண்டிருந்தார். ஆனால், சிவகார்த்திகேயனை ஒரு பெரிய ஸ்டாராக காட்ட வேண்டும் என்பதற்காக, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனுக்கு நெருக்கடி கொடுத்து அன்றைய காலக்கட்டத்திலேயே ரூ. 40 முதல் 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை வாங்கிக் கொடுத்ததே ஆர் டி ராஜா தான். சிவகார்த்திகேயனை ஒரு பெரிய மாஸ் ஹீரோவாக டிசைன் செய்ததே ஆர் டி ராஜா தான்.

சிவகார்த்திகேயன் செல்ஃப் மேட் ஸ்டார் கிடையாது..காரை யார் வங்கி கொடுத்தா? விளாசிய பிஸ்மி.. | Not A Self Made Star Bismi Slams Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகராக இருந்தபோதே, அப்போதைய முன்னணி நடிகையான ஹன்சிகாவை ஜோடியாக்கியது. வேலைக்காரன் படத்தில் நயன் தாராவை நடிக்க வைத்தது, அந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் ஃபஹத் பாசிலை வில்லனாக கொண்டு வந்தது என்று சிவகார்த்திகேயனின் தகுதிக்கு மீறிய விஷயங்களை செய்து அவரை ஒரு ஸ்டாராக டிசைன் செய்தது ஆர் டி ராஜா தான்.

சிவகார்த்திகேயனுக்கு உண்மையில் மனசாட்சி இருந்தால், என்னை உருவாக்கியது ஆர் டி ராஜா தான் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் அவர் அப்படி சொல்லமாட்டார், ஆனால், என்னை போன்றவர்களுக்கு அவரின் வளர்ச்சி காரணமாக இருந்தது யார் என்று நன்றாக தெரியும் என்பதால் சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை, தன்னை பீப்பிள் மேட் ஸ்டார் என்று சொல்வதன் மூலம், தனக்கான பெருமையை மக்களிடம் கொடுத்து, அதன்மூலமாக தனக்குத்தானே பெரிய பெருமையை தேடிக் கொள்கிறார் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.