நான் சரியான ஆள் இல்லன்னு நினைச்சேன்!! சாய் பல்லவி ஓபன் டாக்..
பிரேமம் படத்தில் மலர் டீச்சர் ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் முதல் படத்தில் பெற்றவர் தான் நடிகை சாய் பல்லவி. சாதாரண காஸ்ட்யூமில் எதார்த்தமாக நடித்த சாய் பல்லவி, இப்படத்திற்கு பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழிப்படங்களில் நடித்து வந்தார்.

தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் சீதா ரோலில் நடித்து வருகிறார்.
நான் சரியான ஆள் இல்ல
சமீபத்தில் அவர் நடித்து வெளியான ஏக் தின் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சாய் பல்லவி, பொதுவாக நான் ஒரு படத்தை அது எவ்வளவு பெரிய படம் என்பதை வைத்து தேர்ந்தெடுக்கமாட்டேன்.
ரொம்ப சீரியலான படங்களில்தான் நடித்திருக்கிறேன். அதனால் மென்மையான படத்தில் நடிக்க விரும்பினேன். அந்நேரத்தில் ஏக் தின் பட வாய்ப்பு வந்தது. Before Sunrise படம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அது மாதிரி இருக்கிறது என்று எனக்கு தோன்றியதான் நடிக்க ஒத்துக்கொண்டேன்.

அமீர் கானின் சினிமா பயணத்தை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர் அந்த படத்தை தயாரித்ததும் நான் நடிப்பதற்கு ஒத்துக்கொண்ட காரணங்களில் ஒன்று.
ஏக் தின் பட ஹீரோயினுக்கு நான் சரியாக வரமாட்டேன் என்று முதல் நினைத்திருந்தேன். ஏக் தின் ப்ரீமியர் ஷோ முடிந்தப்பின் கூட அமீரிடம் இதை சொன்னேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பேசிய கதாநாயகனும் அமீர் கானின் மகனுமான ஜுனைத் கான், அப்படி எல்லாம் சொல்லாதீர்கள், இந்த படத்திற்கு பொருத்தமான நாயகி நீங்கள் தான் என்று கூறியிருக்கிறார். தற்போது ஏக் தின் படம் வெளியாகி வெறும் ரூ. 5.86 கோடி மட்டுமே வசூலித்து தோல்வியை பெற்று வருகிறது.