அரசியலில் விஜய்யை எதிர்த்து நிற்பேன்.. சவால் விட்ட பவர் ஸ்டார்
நடிகர் விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். இதனால் சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகப்போவதாக அறிவித்துள்ளார். ஜனநாயகன் திரைப்படம்தான் விஜய்யின் கடைசி படமாகும்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்தும், அவருடைய பேச்சு குறித்து பல்வேறு அரசியல்வாதிகள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சில கடுமையான விமர்சனங்களையும், சில மோசமான வார்த்தைகளை கூட விஜய் எதிராக பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர் "முதலில் விஜயை களத்திற்கு வர சொல்லுங்கள், விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்பேன்" என கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் ரசிகர்களும் கட்சியின் தொண்டர்களும் பவர் ஸ்டாரை வெளுத்து வாங்கி வருகிறார்கள். ஒருசிலர் இதை பவர் ஸ்டார் இந்த நகைச்சுவை நன்றாக உள்ளது என கூறி வருகிறார்கள்.