திரிஷாவுக்காக என்னை அசிங்கப்படுத்துறீங்க..இனி சீமான் தான்!! தவெகவினருக்கு எச்சரிக்கை விடுத்த விஜயலட்சுமி..
விஜயலட்சுமி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி நடிகை விஜயலட்சுமி பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகளை அளித்து வருகிறார். அவர் அளித்த புகாரில் இரு தரப்புக்கும் உச்ச நீதிமன்றத்தில் சமரசம் ஏற்பட்டது.
தற்போது பெங்களூருவில் வசித்து வரும் விஜயலட்சுமி, இந்த பிரச்சனைக்கு முடிவுக்கு வந்தப்பின் வீடியோ ஏதும் வெளியிடாமல் இருந்தார். சமீபநாட்களாக மீண்டும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

இனி சீமான் தான்
இந்நிலையில், சமீபத்திய வீடியோவில், இன்னைக்கு நாம் தமிழர் கட்சிக்கு நான் சப்போர்ட் செய்து பேசுன உடனே அடுத்து சொல்லுவாங்க, நாம் தமிழர் கட்சியோட ஒருங்கிணைப்பாளர் பெரிய தொகையை விஜயலட்சுமிக்கு செட்டில் பண்ணிட்டாரு, அதான் அவங்க பக்கம் பேசிட்டாங்க என்று. ஒன்னும் கிடையாது, என்னை யாராலும் இதுவரைக்கும் பணம் கொடுத்து விலக்கு வாங்க முடியாது.
எனக்கு தப்புன்னு தோணுச்சுன்னா நானே பேசுவேன். நான் தான் இத்தனை நாள் நாம் தமிழர் கட்சியை எதிர்த்துட்டு இருந்தேன் இல்லையா? ஆனா நான் ஒரு வாரமா பார்க்கிறேன், ஒருத்தங்க தப்பு பண்ணதை தப்புன்னு உணர்ந்து, அவங்க திருந்தும் போது ஒரு வாய்ப்பு கேட்கும்ப்போது அவங்களை வாழ விடணும், அதுதான் மனிதநேயம்னு சொல்றது. அதைத்தான் நான் பண்ணேன்.
நான் இதுவரைக்கும் விஜய் அண்ணா என்று அவருக்காக வீடியோ வெளியிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அண்ணாவுடைய ரசிகர்கள் நீங்கள் என்னையே அசிங்கப்படுத்திட்டீங்க.. திரிஷாவுக்காக என்னை இழுத்து கேவலப்படுத்துறீங்களா? இது என்ன வகையில் நியாயம்?

ஆனா, நானும் பார்க்கிறேன், சும்மா பேச்சு எடுத்தா என்னையும் கொச்சைப்படுத்திக்கிட்டு, நாம் தமிழர் கட்சியையும் கொச்சைப்படுத்திட்டு நீங்க இததான் பண்ணிட்டு இருக்கப் போறீங்கன்னா, ஐ அம் ரெடி, இனிமேல் என்னோட வழக்கை பத்தி நீங்க யாராவது கொச்சையா பேசுனிங்கன்னா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்காக உறுதியாக பேசுவேன் என்று அந்த வீடியோவில் விஜயலட்சுமி பேசியிருக்கிறார்.
அணில்ஸ் கூட்டத்துக்கும் இவங்களுக்கும் பிரச்சனை பெருசா இருக்கும் போல…
— தமிழன் சத்யா (@tamilansathya02) August 26, 2026
அம்பாசமுத்திரம் தொகுதிக்கே வந்து அண்ணன் சீமானுக்கு ஆதரவா பிரச்சாரம் பன்றேன்னு சொல்ல வைச்சுட்டானுக!
pic.twitter.com/tjnTNjYgMX
தவெகவினரை தான் அவர் இப்படி பேசியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். சிலர் வீடியோவை சரியாக பாருங்கள், இது விஜயலட்சுமி பேசியதில்லை, யாரோ எடிட் பண்ணி ஷேர் செய்திருக்கிறார்கள் என்றும் குஊறி வருகிறார்கள்.
தவெக இளைஞர்கள் சகோதரி விஜயலட்சுமி அவர்களிடம் வீண் விவாதங்களை வைத்துக்கொள்ள வேண்டாம் #TNNeedsSeeMan pic.twitter.com/Vd69sORZ2O
— David Bilal Ashwin (@BillaAshwin) August 26, 2026