விஜய் சாரே கேட்டாலும் தவெகவுக்கு பாடமாட்டேன்!! கானா வினோத்தை விளாசும் ரசிகர்கள்..
கானா வினோத்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 9ன் டைட்டில் வின்னராக திவ்யா கணேசன் கைப்பற்றினார்.
இந்த சீசனில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று கானா வினோத் தான் டைட்டிலை அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பணப்பெட்டியை கையில் எடுத்து கிளம்பினார். இதனையடுத்து பல பேட்டிகளில் கலந்து கொண்டு வரும் கானா வினோத், விஜய்யின் அரசியல் குறித்து சில கருத்துக்களை பேசியது பேசுபொருளாகியுள்ளது.

விஜய் சாரே கேட்டாலும்
அதாவது தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பாட்டுபாடுமாறு விஜய் சாரே கேட்டாலும் நான் பாடமாட்டேன். நான் ஒரு பொதுவான ஆள், அப்படி இருக்கும்போது நான் விஜய் சாரின் கட்சிக்காக பாட்டு பாடினால் அது தனிப்பட்ட விஷயமாகிவிடும்.
அவர் கட்சிக்காக பாடமாட்டேனே தவிர, விஜய் சார் படத்தில் பாடச்சொன்னால் நான் நிச்சயம் பாடுவேன் என்று கானா வினோத் தெரிவித்திருந்தார். அவர் அப்படி பேசியது குறித்து அறிந்த விஜய் ரசிகர்களோ, கானா வினோத்தை கடுமையாக பேசி வருகிறார்கள்.