பீஸ்ட் படத்தில் அஜித் நடித்திருந்தால் இது தான் நடந்திருக்கும்! மரண கலாய் மீம்
தற்போது பீஸ்ட் படத்தின் ட்ரைலர் தான் இப்போதைக்கு இணையத்தில் ட்ரெண்ட். விஜய் அரசியல் பேசிய காலம் போய் இப்போது 'நான் அரசியல்வாதி இல்லை.. Soldier' என அவர் வாயாலேயே வசனம் பேச வைத்து இருக்கின்றனர்.
மேலும் விஜய் காவியை கிழிக்கும் காட்சியை பார்த்து அது தான் தைரியமான அரசியல் குறியீடு என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க இந்த படத்தை பற்றி பல விதமான மீம்களும் இணையத்தில் உலா வருகிறது. இந்த படம் யோகி பாபுவின் கூர்க்கா போல இருக்கிறது என சில கிண்டல் செய்ய, அதை மணி ஹெய்ஸ்ட் சீரிஸ் உடனும் ஒப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் அஜித் நடித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என கூறி ஓரு மீம் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
மால் உள்ளே நுழைந்து hijack செய்தவர்களை அர்ஜுன் IPS (வலிமை படம் போல) 'அந்த தீவிரவாதிகளை மன்னித்து கேஸ் போடாமல் வீட்டுக்கு அனுப்பி இருப்பார்' என அந்த மீம் இருகிறது.