விஜய் கூப்பிட்டாலும் அரசியலுக்கு செல்லமாட்டேன்!! பிரபல நடிகை ஓபன் டாக்..
விஜய் TVK
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளை மேற்கொண்டு வருவதால அடுத்த ஆண்டு வெளியாகும் ஜனநாயகன் படத்தோடு சினிமாவில் இருந்து விலகவுள்ளார்.
இதனையடுத்து பல சினிமா பிரபலங்கள் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து வருகிறார்கள். இதனால் பத்திரிக்கையாளர்கள் சினிமா நட்சத்திரங்களிடம் விஜய் ஆதரவு தருவீர்களா என்றும் விஜய் கட்சியில் இணைவீர்களா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
இந்நிலையில் மதுரை கே.கே. நகரில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷிடம் ஏராளமானவர்கள் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
அப்போது பெண் ஒருவரை தள்ளிவிட்டு ரசிகர் செல்ஃபி எடுக்க முண்டியடித்த நிலையில், அன்பாக அவரை ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷிடம், விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு செல்லும் என்ணம் இல்லையென வெளிப்படையாக பேசியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்..