ஆணவத்தின் உச்சிக்கு சென்ற இளையராஜா! தம்பி மனைவி இறப்புக்கு கூட செல்லாத இசைஞானி..
தமிழ் இசையின் ஜாம்பவனாக திகழ்ந்து வருபவர் இசைஞானி இளையராஜா. சோகம் முதல் சந்தோஷம் வரை அனைத்து சூழ்நிலைக்கு ஏற்ப, இவரின் பாட்டு தான் எங்கும் ஒலிக்கும். அப்படி இருக்கும் இளையராஜாவிற்கு ஒரு கர்வமும் ஆணவமும் அடங்கிய தலைக்கனம் முடையவராக இன்றும் திகழ்ந்து வருகிறாராம்.
அப்படி அவர் மேடையிலும் சரி, தேடி வரும் பிரபலங்களிடமும் சரி தான் என்கிற எண்ணத்தில் தான் நடந்து கொண்டு வருகிறாராம். இதை அவரது கூடப் பிறந்த சகோதர் கங்கை அமரனிடமும் காட்டி இருக்கிறார். அண்ணன் தம்பிகளாக சினிமாவில் கொடிக்கட்டி பறந்த கங்கை அமரன் இயக்கும் படத்தின் இசையே இளையராஜா தான்.
அந்த நிலையில் சில மனக்கசப்பு ஏற்பட்டு இருவருக்கும் பிரச்சைகள் வந்துள்ளது. அது உச்சம் தொட இருவரும் 13 வருடங்களாக பார்க்காமலும் பேசாமலும் இருந்து வருகிறார். ஒரு கட்டத்தில் கங்கை அமரன் மனைவி இறப்பிற்கு கூட இளையராஜா வரவில்லை. அப்படியொரு ஆணவத்தில் இருந்து வந்துள்ளார்.
ஆனால் அவர்களின் வாரிசுகள் எந்த பகையும் இல்லாமல் இணைந்து படங்களை கொடுத்தும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். சமீபத்தில் இளையராஜா 13 வருடங்களுக்கு பின் கங்கை அமரனை சந்தித்து பேசிய புகைப்படம் வெளியாகியுள்ளது.